Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

குழந்தைகளின் புன்னகையே தேசத்தின் மகிழ்ச்சி! அவர்களின் எதிர்காலமே நாட்டின் உண்மையான வளர்ச்சி!. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய குழந்தைகள் தினத்தில், அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான கல்வி, சத்தான உணவு, சிறந்த மருத்துவ வசதி, பாதுகாப்பான சூழல் மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெற்று, மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் வளர வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் பாகுபாடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் கனவுகளைக் காப்பதும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். “குழந்தைகளைப் பாதுகாப்போம்! அவர்களின் கனவுகளை வளர்ப்போம்! வளமான பாரதத்தை உருவாக்குவோம்!. அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

Releated Posts

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் எண்ணற்ற கனவுகளுடன்…

ByBySenthil KumarNov 10, 2026

தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9…

ByBySenthil KumarNov 10, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததோடு, மதுபோதையில்…

ByBySenthil KumarNov 10, 2026

தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை,…

ByBySenthil KumarNov 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...