Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

கேப்டன் விஜயகாந்த் வரலாறு

1978-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தி. நகரில் உள்ள ரோகினி லாட்ஜில் தான் ஆரம்பகாலத்தில் தங்கினார். 1978 ஆம் ஆண்டு இயக்குனர் திரு. M.A. காஜா அவர்களின் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க வைத்தார். விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றினார். 

1978 ஆம் ஆண்டு தென் இந்திய தலைமை ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு அகில இந்திய தலைமை ரசிகர்மன்றமாக மாற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டு “தமிழ்நாடு விஜயகாந்த் தலமை ரசிகர் மன்றம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக திரு. ராமுவசந்தன் அவர்கள் இருந்து வந்தார். திரையுலகில் விஜி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1982 ம் ஆண்டு தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!! என்ற முழக்கத்துடன் ”தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர்மன்றம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற கொள்கையுடன் ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்துட்ட உதவிகள் செய்யப்பட்டது.மன்ற திரப்புவிழா என்றாலே உதவிசெய்யும் விழாவாக மாறியது. 1985 ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்டார்.

சாட்சி, சட்டம் சிரிக்கிறது, நீதி பிழைத்தது போன்ற சமூக விழிப்புணர்வு படங்களில் நடித்து மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு ”புரட்சிக்கலைஞர்” என்ற பட்டமும் கிடைத்தது.

கேப்டன்எனப்பெயர் வரக்காரணம் ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.ஈழத்திற்காக சிம்மக்குரல்.

1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி L.C.கண்ணையா அம்சவேணி அவர்களின் மகளான பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

ஈழ விடுதலைக்காக போராடிய போராளி பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும், முருகன் மேல் உள்ள பற்றாலும் எனவும் தாம் பிறந்த மதுரை மண் மீது உள்ள பற்றாலும் இளையமகனுக்கு சண்முகபாண்டியன் என பெயர் சூட்டினார்.

நடிகர் சங்கம்

  • 1999 முதல் 2004 வரை கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக செயல்பட்டார்.
  • நடிகர் சங்க தலைவராக பதவியேற்றவுடன் அனைத்து நடிகர்களையும் ஒன்றினைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி  நெடுங்காலமாக கடனில் இருந்த நடிகர் சங்க கடனை அடைத்தார்.
  • நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

2005 ம் ஆண்டு கட்சி துவங்குவேன் என்று திருவண்ணாமலையில் கேப்டன் விஜயகாந்த் அறிவித்தார்.

மதுரையில் பள்ளியில் படிக்கும்போதே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்..

2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பல லட்சம் வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். 

2009 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல லட்சம் வாக்குகளை பெற்றது தேமுதிக. 2011 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, களம் கண்ட தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கேப்டன் விஜயகாந்த்

மாசிடோனியா‘ என்ற நாட்டின் மன்னன் ‘பிலிப்’ மிகச்சிறப்பாகத் தன் நாட்டை ஆண்டு வந்தான். அங்கே வாழக்கூடிய மக்கள் ,எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமரியாதையோடு சீரும் சிறப்புமாக இருந்தனர் . எந்தக் குறையுமில்லாமல் , அங்கு மிகச்சிறந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஒருநாள் பிலிப் மன்னன், மிகுந்த மகிழ்ச்சியோடு அரண்மனை முற்றத்தில் உலவிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கே வந்த அமைச்சர், மன்னன் மகிழ்ச்சியாக இருப்பதைக்  கண்டார். “என்ன மன்னா? ஒருநாளும் இல்லாத திருநாளாக மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்படுகிறீர்களே? “என்று கேட்டார். பிலிப், “ஒன்றுமில்லை” என்று மறுத்தார். உடனே அமைச்சர், “இல்லை மன்னா… நேற்று இல்லாத மாற்றம் ஒன்று, இன்று உங்கள் முகத்தில் தெரிகிறதே! “என்று வளைத்து வளைத்துக் கேட்டார். வேறு வழியில்லாமல் பிலிப், தன் மகிழ்ச்சிக்கான காரணத்தைச் சொன்னார். “எனக்குப் பிறகு மாசிடோனியாவை ஆளச் சற்றுமுன்பு ஆண் வாரிசொன்று பிறந்திருக்கிறது. அதுதான் என் மகிழ்ச்சிக்குக் காரணம் “என்று பிலிப் சொன்னார். ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கேற்ப பிலிப் மன்னனுக்கு மகிழ்ச்சி தந்த அந்த ஆண் வாரிசு, உலகை வெல்லும் லட்சியத்தோடு வளர்ந்து. அது உலகத்தை வென்றும் காட்டியது. அப்படி உலகை வென்று, ‘வெற்றி வாகை’ சூடிய அந்த ஆண் வாரிசுதான், ‘மகா அலெக்சாண்டர்’ ஆவார்.   

தரணியை வெல்லப் பிறந்த அலெக்சாண்டரைப் போலத் தமிழகத்தை வெல்லவும், நல்ல வழியில் கொண்டு செல்லவும் இளகிய மனதோடு ஒருவர் பிறந்தார். அவர்தான், நம் மக்கள் தலைவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். உலகத் தமிழர்கள் ஒருசேர உச்சரிக்கும் இந்த மந்திரப் பெயருக்குரிய மனிதர் , 25.08.1952 ஆம் ஆண்டு ஆவணி 10 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 6.35 மணியளவில் நான்மாடக்கூடலாம் மதுரையில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அழகர்சாமி என்பதாகும். அன்புத்தாயார் ஆண்டாள் ஆவார். மனமொத்த இந்தத் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த நம் கேப்டன் அவர்கள், சுட்டிக் குழந்தையாக ஒளிவீசும் விழிகளோடு திகழ்ந்தார். 

இவரிடம் ஏதோ ஒரு தனிசிறப்பு இருப்பதாகக் கருதிக் கேப்டனின் தந்தையும் தாயும் இவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டனர். நம் புரட்சிக்கலைஞரின் அருமை தந்தை அழகர்சாமி அவர்கள் தமது அன்புச்செல்வனுக்கு என்ன பெயரிடுவது என்று யோசித்தார். இறுதியாக, ஒரு முடிவுக்கு வந்தார். தன் குடும்பம் இந்த அளவுக்கு வளர்வதற்குக் காரணமான தன் தந்தை நாராயணசாமி, அவர்களின் பெயரினைச் சூட்டலாம் என்ற முடிவுக்கு வந்தார். 

தன் அப்பாவின் பெயரை வைத்ததால் மகன்மீது நிறைய அன்பைப் பொழிந்தார். அதனால், ‘ நாராயணசாமி’ என்ற பெயரை வைத்திருந்தாலும், அந்தப் பெயரால் அழைக்காமல், ‘விஜயராஜ்’ எனச் செல்லப் பெயரிட்டு, தத்தாவின் பெயரைச் சொல்லி அழைப்பது மரியாதையாக இருக்காது என்பதைக் கருதி, ‘விஜயராஜ்’ என்றே அழைத்தனர். அவரது நேர்மை, நற்குணங்கள், தலைமைப்பண்புகள் என நீளும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு, பல செல்லப் பெயர்களை வழங்கி மகிழ்ந்தனர். 

இது, வேறு யாருக்கும் வாய்க்காத ஒன்றாகும். இதற்கு முக்கியமான காரணம், தன்னிடம் பழகிய எல்லாரிடமும், உண்மையான அன்பைக் கேப்டன் பொழிந்தமையே ஆகும். ஒவ்வொரு பெரிய தலைவரின், நட்சத்திர நடிகரின், பிரபல மனிதரின் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் “செல்லப் பெயர்கள் ‘இருப்பதுண்டு. சொந்தப்பெயரைக் கொண்டு அழைப்பதைவிட, இந்தச் செல்லப்பெயரைக் கொண்டே, பிரபலங்களை மக்கள் அழைத்து மகிழ்வார்கள்.

அந்த வகையில், புரட்சித்தலைவருக்கு அவரது தாயார் வைத்த செல்லப்பெயர், ‘ராமு’ என்பதாகும். ஆனால், தமிழ் ரசிகர்களோ, வாத்தியார்’ என்று அழுத்து பெருமிதம் கொண்டனர். அதே போல், மகாத்மாகாந்தி அவர்களைத் தேசத்தலைவர்களும், பொதுமக்களும்’ பாபு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். பேரறிஞர் அண்ணா அவர்களை, அவரது தாயார் துரை’ என்றும், தமிழக மக்கள் அன்பாக ‘ அண்ணா ‘ என்றும் அழைத்துக் கொண்டாடினர்.  திரைத்துறையில்  பிரபலமாகத்  தொடங்கியதும்,  அவரோடு உடன் நடித்த சக கலைஞர்களும், இயக்குநர்களும், தொழில்  நட்புத்துறை  வல்லுநர்களும், நடிகைகளும், ‘ விஜி ‘ என்று அன்பொழுக  அழைத்து  மகிழ்ந்தனர்.  திரைத்துறை வட்டாரத்தில், இந்தப் பெயர்,  மிகப் பிரபலமானதாகும்.

கேப்டன் ‘ என்ற இந்தப் பெயர், ‘  கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்துப் பெரிய அளவில் அப்படம் வெற்றி பெற்றதும், தமிழ்நாடு மக்களிடம் நிலைத்துவிட்டது. அந்தப் படத்தில் அவர் காட்டியிருந்த ‘ மிடுக்கு ‘  காரணமாக, அனைவரும் அந்தப் பெயரினை விரும்பி ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் ரசிகர்களும்,  திரையுலகினரும்,  ‘கேப்டன்’ என்ற பெயரினை, அவருக்கே  உரியதாகச் கருதி நிரந்தரமாக்கிக் கொண்டனர்.

விஜயராஜ் என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள், மதுரை மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் கே.என். அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

விஜயராஜ் என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள், மதுரை மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் கே.என். அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

Scroll to Top
× வணக்கம், தேமுதிக...