இயன்றதை செய்வோம்..! இல்லாதவர்க்கே...!
அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்
அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம்
கொள்கைகள்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முக்கிய கொள்கை விளக்கங்கள்.
அறிவிப்புகள்
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்
நிர்வாகிகள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தலைமை கழக நிர்வாகிகள் விவரங்கள்
உறுப்பினராக
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தில் உறுப்பினராக இணையுங்கள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) 2005 செப்டம்பர் 14 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். விஜயகாந்த் இதன் நிறுவனத் தலைவர் ஆவார்.
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
தேமுதிக-வின் முக்கிய கொள்கைகள்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின்முக்கிய கொள்கை விளக்கங்கள்.
- தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் உன்ன உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் ஏற்படுத்திக் கொடுப்பது.
- ஊழலற்ற, நேர்மையான மக்கள் ஆட்சியை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்போம்.
- அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியையும் கற்போம்.
- தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவோம், சமச்சீர் கல்வியை கொண்டுவருவோம்.
கேப்டன் விஜயகாந்த் வரலாறு
1978-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தி. நகரில் உள்ள ரோகினி லாட்ஜில் தான் ஆரம்பகாலத்தில் தங்கினார். 1978 ஆம் ஆண்டு இயக்குனர் திரு. M.A. காஜா அவர்களின் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க வைத்தார். விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றினார்.
1978 ஆம் ஆண்டு தென் இந்திய தலைமை ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு அகில இந்திய தலைமை ரசிகர்மன்றமாக மாற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டு “தமிழ்நாடு விஜயகாந்த் தலமை ரசிகர் மன்றம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக திரு. ராமுவசந்தன் அவர்கள் இருந்து வந்தார். திரையுலகில் விஜி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.