Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை. இந்தச் சம்பவங்கள் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு மனித உயிருக்கு ரூ.40 லட்சம்தான் மதிப்பா? உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமை அல்ல; இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே உண்மையான பொறுப்பு. சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதும், காவல்துறையினரே வன்முறைக்குப் பலியாவதும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

பொதுமக்களின் உயிருக்கும், காவல்துறையினரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. வெறும் அறிவிப்புகளும் ஆய்வுக் கூட்டங்களும் போதாது. கொலைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து முதலமைச்சர் மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிப்பது நிவாரணத் தொகை அல்ல; அவர்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான கடமை!

Releated Posts

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் எண்ணற்ற கனவுகளுடன்…

ByBySenthil KumarNov 10, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததோடு, மதுபோதையில்…

ByBySenthil KumarNov 10, 2026

தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை,…

ByBySenthil KumarNov 7, 2026

தேமுதிக தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி

இன்று 01 நவம்பர் தமிழ்நாடு நாள் இந்த உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, நமது முன்னோர்களால் போற்றி காப்பாற்றப்பட்ட  நமது தமிழ் மொழியையும்,…

ByBySenthil KumarNov 1, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...