Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் எண்ணற்ற கனவுகளுடன் வாழ வேண்டிய பிஞ்சுக் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோன இச்சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ள அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் மனவலிமையை அளிக்க வேண்டுகிறேன்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனியும் நிகழாத வகையில், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த ஐந்து பேரின் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கண்ணீருடன் ஆழ்ந்த இரங்கல்!

Releated Posts

தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9…

ByBySenthil KumarNov 10, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததோடு, மதுபோதையில்…

ByBySenthil KumarNov 10, 2026

தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை,…

ByBySenthil KumarNov 7, 2026

தேமுதிக தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி

இன்று 01 நவம்பர் தமிழ்நாடு நாள் இந்த உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, நமது முன்னோர்களால் போற்றி காப்பாற்றப்பட்ட  நமது தமிழ் மொழியையும்,…

ByBySenthil KumarNov 1, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...