பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள்! பெண் குழந்தைகளைப் போற்றுவோம்! பெண்ணுரிமையைக் காப்போம்! பெண் குழந்தைகள் குடும்பத்தின் பெருமை மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கும் மகத்தான சக்திகள். பெண் குழந்தைகள் பிறப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம், சம உரிமை மற்றும் சுயமரியாதையை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம் உள்ளிட்ட அனைத்து அநீதிகளையும் ஒழித்து, அவர்கள் அச்சமின்றி வாழும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்.
பெண் குழந்தைகளுக்குத் தேவை இரக்கம் அல்ல; சம உரிமையும், சம வாய்ப்பும், சாதிப்பதற்கான சுதந்திரமுமே. ஒரு பெண் குழந்தையின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுத்தால், ஒரு தலைமுறையின் எதிர்காலத்திற்கே ஒளி கொடுத்ததாகும்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம்!
பெண் குழந்தைகளின் சாதனைகளைப் போற்றுவோம்!
அனைத்து பெண் குழந்தைகளுக்கும் எனது இனிய சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





