Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து செய்தி

அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து செய்தி

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்று தனது நிர்வாகப் பயணத்தைத் தொடங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், தொடர்ந்து 25 ஆண்டுகளாக அரசின் தலைமைப் பொறுப்பில் மக்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகும். 2001 முதல் 2014 வரை குஜராத் மாநில முதலமைச்சராகவும், அதனைத் தொடர்ந்து 2014 முதல் இந்தியாவின் பிரதமராகவும் நாட்டிற்குப் பணியாற்றி வரும் அவர், தற்போது மூன்றாவது முறையாகத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் பொறுப்பை வகித்து வருகிறார்.

அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இத்தருணத்தில், மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பிலும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் அவர் மேற்கொள்ளும் மக்கள் பணி மேலும் பல ஆண்டுகள் தொடரவும், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்றவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

#Dmdk #dmdkparty #DMDKITWING #PremallathaVijayakant #LKSudhish #Vijayaprabhakaran #PMO #pmofindia

Releated Posts

செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும்…

ByBySenthil KumarOct 6, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி – பத்திரிகை செய்தி – 02.10.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2026) 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ…

ByBySenthil KumarOct 2, 2026

தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டி அறிக்கை

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக…

ByBySenthil KumarOct 1, 2026

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கை

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக்…

ByBySenthil KumarOct 1, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...