தமிழகத்தில் கடந்த சில காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை கடும் உயர்வு, அதுமட்டுமல்லாமல் காய்கறி, பழம், மின்கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, இது மக்களை பெருதும் பாதிக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளது. எனவே தமிழக முதல்வர்கள் அவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி நெல் வீணாவதை தடுத்து, நேரடியாக நெல்லை கொள்முதல் செய்யவேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அரிசியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் குடும்பச் செலவினத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அரிசி என்பது ஆடம்பரப் பொருள் அல்ல; ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான உணவுப் பொருளாகும். அதன் விலை கட்டுக்கடங்காமல் உயர்வது நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அரிசி, சர்க்கரை, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சந்தையில் செயற்கையான விலை உயர்வு, பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்றவற்றைத் தடுக்க அதிகாரிகள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களின் குடும்பச் சுமையை கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல், உடனடியாக கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் அரிசி விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.




