Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 10 தொகுதிகளில் போட்டியிட்டு, 1 தொகுதியில் வெற்றி பெற்றது. மக்கள் மனநிலையின் வெளிப்பாடு மட்டுமல்ல; இத்தேர்தல் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி. அதனால் நாம் யாரும் இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி, கேப்டன் நமக்கு வகுத்துக் கொடுத்த பாதையிலே தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம். கேப்டன் மீதும் தேமுதிக மீதும் மக்கள் வைத்துள்ள பற்றும், பாசமும், நம்பிக்கையும், மரியாதையும் இம்மியளவும் குறையவில்லை என்பதை மக்களை நேரடியாக சந்திக்கும் போது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது. மேலும், மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியைச் சேர்ந்த அனைவருக்கும், வாக்களித்து ஆதரவு அளித்த மக்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் தேர்தலில் உழைத்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், மேலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து தொண்டர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தற்காலிகத்தை கண்டு துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடன் சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல், உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நம் இலக்கை அடைய வீறுகொண்டு நடைபோடுவோம். “மாற்றம் ஒன்றே மாறாதது.” விருத்தாசலம் தொகுதியின் வெற்றியை கேப்டனுக்கும், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் சமர்ப்பிக்கிறேன். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்”.

Releated Posts

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல்…

ByBySenthil KumarSep 7, 2026

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...