Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரங்களிலும், திறந்தவெளிகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து, முளைத்து அல்லது அழுகி, பெரும் சேதத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையால் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் முழுவதுமாக வீணாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும். இதனால், தங்களது உழைப்பையும் முதலீட்டையும் நம்பி வாழும் விவசாய பெருமக்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகளிடம் உள்ள நெல்லை உடனடியாக அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பான கிடங்குகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும். மழையால் நெல் சேதமடையாமல் தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை விவசாயிகளுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் உழைப்பை அலட்சியப்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாகும். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல், போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Releated Posts

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

அறிவை அள்ளித் தருவதோடு, ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தந்து, மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர்…

ByBySenthil KumarSep 5, 2026

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை

தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…

ByBySenthil KumarSep 4, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த புனித நாளை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மிலாடி நபி திருநாளாகக் கடைப்பிடிக்கின்றனர். “எல்லா மதமும் சம்மதம்” என்ற கொள்கையை…

ByBySenthil KumarAug 26, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...