Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடி செக்கிழுத்த செம்மல். இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிக கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிக முக்கியமானவர், பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் படித்து தேர்ந்தவர், மிக சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்து ஏழை மக்களுக்கு இலவசமாக வாதிட்டவர். சுதந்திரத்திற்காக போராடி செக்கிழுத்து வெள்ளையர்களை வெளியேறு என்று மாபெரும் போராட்டத்தை நடத்தி, சுதந்திரம் வாங்கி கொடுத்த மாமனிதர். நாட்டிற்கு பெருமை சேர்த்தவர், கப்பலோட்டிய தமிழர் அவரின் பிறந்தநாளில் இன்று அவரை போற்றுவோம், புகழ்வோம், வணங்குவோம். அவருடைய தியாகம் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்துநிற்கும். தேமுதிக சார்பாக வ.உ.சி யின் புகழை போற்றி வணங்கிறோம்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

அறிவை அள்ளித் தருவதோடு, ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தந்து, மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர்…

ByBySenthil KumarSep 5, 2026

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை

தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…

ByBySenthil KumarSep 4, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த புனித நாளை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மிலாடி நபி திருநாளாகக் கடைப்பிடிக்கின்றனர். “எல்லா மதமும் சம்மதம்” என்ற கொள்கையை…

ByBySenthil KumarAug 26, 2026

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற சொல்லுக்கு இலக்கணமாக நம்மிடமிருந்து மறைந்தாலும் தெய்வமாக நம்…

ByBySenthil KumarAug 26, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...