Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தொடரும் லாக்கப் படுகொலைகள் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தொடரும் லாக்கப் படுகொலைகள் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல், அண்மையில் நாகர்கோவிலில் காவல் நிலையத்தில் காவலில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற லாக்கப் படுகொலை நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குரியது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து லாக்கப் படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம்?. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அந்தக் குடும்பத்திற்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, நாங்கள் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும், லாக்கப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, “வேலியே பயிரை மேய்ந்தது போல” பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தை மீறி லாக்கப் படுகொலை செய்வது கடுமையாக கண்டிக்ககூடியது. தமிழக முதல்வர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற லாக்கப் படுகொலைகள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Releated Posts

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி – கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி – 24.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் இன்று (24.07.2026) கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்…

ByBySenthil KumarJul 24, 2026

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி, பயனியர் நிழற்குடை திறப்பு விழா -பத்திரிக்கை செய்தி – 23.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2006 முதல் 2011 வரை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது விருத்தாசலம்…

ByBySenthil KumarJul 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை…

ByBySenthil KumarJul 21, 2026

தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்,…

ByBySenthil KumarJul 18, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...