Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், தனியறையில் சிக்கியிருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்தார். இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், கல்யாணியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றவாளியான ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். கடமையின்போது நேர்மையாகவும் உண்மையுடன் செயல்பட்ட ஒரு பெண் அதிகாரியை, அவர் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்காக கொடூரமாகக் கொலை செய்துள்ள இந்த செயல் கடுமையாயன கண்டனதிற்குறியதும், மனிதநேயமற்றதும் ஆகும். இத்தகைய கொடிய குற்றங்கள் கடுமையாக தண்டிக்கப்படாத பட்சத்தில், சட்டத்தை நம்பி நேர்மையுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சமூகத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கை இன்மையையும் இது ஏற்படுத்தும். எனவே, இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு LIC அலுவலகத்தில் வேலையும், இழப்பீடு தொகையும் வழங்கிட வேண்டும்.  மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...