Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்டுவது, புனிதமான நீர்நிலைகளை அசுத்தமாக மாற்றுவது போன்ற செயல்கள் இயற்கையை பெரிதும் சேதப்படுத்துகின்றன. நமக்கு கிடைத்துள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

உலக சுற்றுச்சூழல் தினம் என்பது வெறும் விழிப்புணர்வு நாளாக மட்டுமல்லாமல், நமது பொறுப்பையும், கடமையையும் நினைவூட்டும் நாளாகும். மரங்களை பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, நீரை சிக்கனமாக பயன்படுத்துவது போன்ற செயல்களில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

மக்களும், அரசும் இணைந்து செயல்பட்டால் தான் நம் நாட்டை அனைத்து விதங்களிலும் முன்னேற்ற முடியும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது எதிர்கால தலைமுறைக்கான மிகப்பெரிய பொறுப்பாகும். பூமி நமக்குத் தாயாக இருந்து எல்லாவற்றையும் தருகிறது! அதற்கு நன்றிக்கடனாக இயற்கையைக் காப்போம். அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்.

“என் நாடு என் வீடு” என்ற உணர்வோடு நாமும் நம் நாட்டை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

Releated Posts

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இரு வேறு பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும்…

ByBySenthil KumarJun 2, 2026

முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாட்டின் முக்கியமான பேருந்து நிலையங்களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பல பகுதிகளுக்கு போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு…

ByBySenthil KumarJun 2, 2026

கோயம்பேட்டில் இளம் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 18 வயதுடைய இளம்பெண் யான்சி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக…

ByBySenthil KumarJun 1, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...