Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் செவிலியர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜனநாயக வழியில் போராடியுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் நம் உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரை காப்பாற்றிய  “Nightingale”. அவர்களுடைய கோரிக்கையை இந்த அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டியது கடமை. பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர் பிரதிநிதிகளை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய செவிலியர்களை இரவு நேரத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும்.

செவிலியர்களின் குரலை காவல்துறை நடவடிக்கைகளால் அடக்க முயல்வதை விடுத்து, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு உடனடியாக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். “சம வேலைக்குச் சம ஊதியம்” உள்ளிட்ட அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் பரிசீலித்து, நியாயமான தீர்வை விரைந்து வழங்க வேண்டும். கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து அரசு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். கொரோனா காலத்தில் நம் உயிரைக் காத்த செவிலியர்களின் உரிமைக்குரலை இன்று நாம் காப்பது நமது கடமை.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகம் – 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி – பத்திரிகை செய்தி – 02.10.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2026) 157வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ…

ByBySenthil KumarOct 2, 2026

தேர்தலில் EVM பயன்படுத்தி தேர்தல் நடத்துவதற்கு பதில் பழைய வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டி அறிக்கை

இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்காளர் உரிமையை எந்தவிதத்திலும் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. வாக்காளர் திருத்தப்பட்டியல் தான் SIR அதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக…

ByBySenthil KumarOct 1, 2026

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வையும் பாராட்டி அறிக்கை

கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் துணிச்சலும், கடமை உணர்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக்…

ByBySenthil KumarOct 1, 2026

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணச் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு…

ByBySenthil KumarSep 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...