Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணச் செய்தி

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணச் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

அக்டோபர் 5 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு நிகழ்வுகளில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில், தமிழ்நாட்டின் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ், MP., அவர்கள் பங்கேற்க உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நிதியம் (UNICEF), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம், அதன் எதிர்கால பயன்பாடுகள், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் தொழில்நுட்ப தூதருடனும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர்.

தமிழ்நாட்டின் சார்பில் இந்த முக்கியமான சர்வதேச நிகழ்வுகளில் தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ், MP., அவர்கள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.

இந்த சர்வதேசப் பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் குரலை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அரங்கில் வலுவாக பதிவு செய்து, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய வளர்ச்சிப் பாதைகள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு திரும்புவதற்கு திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

தலைமை கழகம்

Releated Posts

கோவையில் காவல்துறை அதிகாரியின் துணிச்சலுக்கு தேமுதிக சார்பில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து அறிக்கை

கோவையில் கோவில் பாளையம் தலைமை காவலர் அதிகாரி (Head Constable) திரு.வேல்முருகன் அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க, சுமார் 40 கிலோமீட்டர்…

ByBySenthil KumarSep 28, 2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகால…

ByBySenthil KumarSep 21, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம்

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1தருமபுரி கிழக்குதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S., அவர்கள் கழக அவைத்தலைவர்2தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்குதிரு.L.K.சுதீஷ்,B.A.,MP., அவர்கள்,…

ByBySenthil KumarSep 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...