Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை

தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாட குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வருமானம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு இதனை வெறும் விலை உயர்வாக பார்க்காமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களும் எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லாமல், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் நம் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த புனித நாளை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மிலாடி நபி திருநாளாகக் கடைப்பிடிக்கின்றனர். “எல்லா மதமும் சம்மதம்” என்ற கொள்கையை…

ByBySenthil KumarAug 26, 2026

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற சொல்லுக்கு இலக்கணமாக நம்மிடமிருந்து மறைந்தாலும் தெய்வமாக நம்…

ByBySenthil KumarAug 26, 2026

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...