இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுவோம். அவர்களின் அரிய தியாகமே நம் நாட்டிற்கு ஜனநாயகத்தை பெற்றுக் கொடுத்தது மற்றும் இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரத்தையும் நமக்குத் தந்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்த 80-வது ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பல சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். குறிப்பாக வறுமை மற்றும் வேலையின்மை, லஞ்சம் மற்றும் ஊழல், விவசாயிகளின் பிரச்சினைகள் விலைவாசி உயர்வு மற்றும் எல் நினோ, மின்சாரப் பிரச்சினைகள், மீனவர்கள் பிரச்சனை, போன்ற சவால்களை சந்திக்க இருக்கும் இந்த ஆண்டு, மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்ட ஒரு நிறைவான தேசமாக நமது இந்தியா மாற வேண்டும். வல்லரசு நாடுகளுக்கு இணையாக, அனைத்துத் துறைகளிலும் நமது இந்தியாவும் வல்லரசு நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு குடிமகனின் விருப்பமாக இருக்கிறது. அத்தகைய சிறப்பான அமைதியும், வளர்ச்சியும் கொண்ட ஆண்டாக இந்த ஆண்டு அமைய வேண்டும் என்றும், இந்த சுதந்திர நாளில் நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்போம்.
அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.





