Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் கைத்தறி ஆடைகளை அணிவதை ஒரு கடமையாகக் கொண்டிருந்தார். ஒரு மனிதனுக்கு இரு கண்கள் எப்படி முக்கியமோ, அதுபோல் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயமும் நெசவும் இரு கண்கள் என்று புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் கூறுவார். 2003ஆம் ஆண்டு நெசவாளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு கட்சியினர் கஞ்சித் தொட்டி திறந்தனர்; மற்றொரு கட்சியினர் பிரியாணி வழங்கினர். ஆனால் கேப்டன் அவர்கள், நெசவாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், ரூ.1 கோடிக்கும் மேல் நிதியை வழங்கினார். மேலும், நெசவாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக துணிகளை வழங்கினார். அவரது எளிமையான வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாகும்.

மகாத்மா காந்தியடிகள் சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கதர் ஆடையை முன்னிறுத்தினார். அந்நிய ஆடைகளை புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், சுதந்திரப் போராட்டத்தையும் வலுப்படுத்தினார். கைத்தறி என்பது ஒரு துணி மட்டுமல்ல; அது தன்னிறைவு, தேசப்பற்று மற்றும் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாகும். கைத்தறி ஆடைகள் கோடைக்காலத்தில் அணிவதற்கு மிகவும் வசதியானவை. இயற்கை இழைகளால் நெய்யப்படுவதால் உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியமான உணர்வையும் அளிக்கின்றன. மேலும், கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் நம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக இருக்க முடியும். எனவே, தேசிய கைத்தறி தினமான இன்று மட்டும் அல்லாமல், ஆண்டின் அனைத்து நாட்களிலும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை தொடர்ந்து பயன்படுத்துவோம். இந்திய பாரம்பரியத்தை பாதுகாப்போம்; உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்போம்; நம் நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கதர் ஆடைகள் அணிவோம், கைத்தறியை காப்போம்;

இந்திய பாரம்பரியத்தை போற்றுவோம்!

Releated Posts

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

குழந்தைகளின் புன்னகையே தேசத்தின் மகிழ்ச்சி! அவர்களின் எதிர்காலமே நாட்டின் உண்மையான வளர்ச்சி!. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர்…

ByBySenthil KumarNov 14, 2026

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் எண்ணற்ற கனவுகளுடன்…

ByBySenthil KumarNov 10, 2026

தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9…

ByBySenthil KumarNov 10, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததோடு, மதுபோதையில்…

ByBySenthil KumarNov 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...