Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் கைத்தறி ஆடைகளை அணிவதை ஒரு கடமையாகக் கொண்டிருந்தார். ஒரு மனிதனுக்கு இரு கண்கள் எப்படி முக்கியமோ, அதுபோல் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயமும் நெசவும் இரு கண்கள் என்று புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் கூறுவார். 2003ஆம் ஆண்டு நெசவாளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு கட்சியினர் கஞ்சித் தொட்டி திறந்தனர்; மற்றொரு கட்சியினர் பிரியாணி வழங்கினர். ஆனால் கேப்டன் அவர்கள், நெசவாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், ரூ.1 கோடிக்கும் மேல் நிதியை வழங்கினார். மேலும், நெசவாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக துணிகளை வழங்கினார். அவரது எளிமையான வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாகும்.

மகாத்மா காந்தியடிகள் சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கதர் ஆடையை முன்னிறுத்தினார். அந்நிய ஆடைகளை புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அணிவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும், சுதந்திரப் போராட்டத்தையும் வலுப்படுத்தினார். கைத்தறி என்பது ஒரு துணி மட்டுமல்ல; அது தன்னிறைவு, தேசப்பற்று மற்றும் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாகும். கைத்தறி ஆடைகள் கோடைக்காலத்தில் அணிவதற்கு மிகவும் வசதியானவை. இயற்கை இழைகளால் நெய்யப்படுவதால் உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியமான உணர்வையும் அளிக்கின்றன. மேலும், கைத்தறி ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் நம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக இருக்க முடியும். எனவே, தேசிய கைத்தறி தினமான இன்று மட்டும் அல்லாமல், ஆண்டின் அனைத்து நாட்களிலும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை தொடர்ந்து பயன்படுத்துவோம். இந்திய பாரம்பரியத்தை பாதுகாப்போம்; உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்போம்; நம் நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கதர் ஆடைகள் அணிவோம், கைத்தறியை காப்போம்;

இந்திய பாரம்பரியத்தை போற்றுவோம்!

Releated Posts

மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், காவேரி நதியில் தண்ணீர் திறந்துவிடாததைக் கண்டித்தும், ஒகேனக்கலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும், காவிரி நதியிலிருந்து…

ByBySenthil KumarAug 4, 2026

ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டித்து அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி…

ByBySenthil KumarAug 4, 2026

கேப்டன் அவர்களின் 74வது பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினம்

ஆகஸ்ட் 25ஆம் தேதி, புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி,…

ByBySenthil KumarJul 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...