Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தென்னக ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக – பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க உடனடி மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுகோள் விடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை

தென்னக ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக – பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க உடனடி மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுகோள் விடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை

தென்னக ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளுக்காக தென்னக ரயில் சேவைகள் மற்றும் மின்சார ரயில் சேவைகளை திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்த திடீர் நடவடிக்கை காரணமாக பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளாகியுள்ளனர். தினமும் ரயிலை நம்பி பயணம் செய்யும் அனைவரும், தேர்வு காலத்தில் மாணவர்கள், உள்ளிட்ட இலட்சக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் தென்னக ரயில் சேவைகளும் மின்சார ரயில் சேவைகளும் முழுமையாக பராமரிப்பு பணிகள் என்ற காரணத்தால் நிறுத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே அறிவித்து மாற்றுத் பயணத் திட்டத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திடீரென்று ரயில்கள் ரத்து செய்வது முறையல்ல. “பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தற்காலிக அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று பொதுமக்களை மட்டும் பொறுப்பேற்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு பதிலாக, ரயில்வே நிர்வாகம் என்ன மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க தென்னக ரயில்வே நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு, மாற்று போக்குவரத்து மற்றும் கூடுதல் ரயில் சேவை ஏற்பாடுகளை செய்து, பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...