Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்கக் கூடாது என்றும், பகைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்றும், அன்பும், அறமும் தான் மனிதநேயத்தின் அடிப்படை என்றும், இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார். இந்த இனிய கிறிஸ்துமஸ் தின நன்னாளில், மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை தங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தன்னலமற்ற சேவையாற்றும் மனப்பாங்கை கிறிஸ்துமஸ் நமக்கு கற்றுத் தருகிறது. இந்த புனித நாளில் அன்பையும், அமைதியும், நமக்கு போதித்த இயேசு பிரான் அவர்களை பிரார்த்திப்போம் வணங்குவோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...