நடிகை அம்பிகா – ராதாவின் தாயார் திருமதி.சரசம்மா நாயர் (87) வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சரசம்மா நாயர் கலைத்துறையிலும், அரசியலிலும் சிறந்து விளக்கியவர். அம்பிகாவும், ராதாவும் கேப்டனுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். அப்போது சரசம்மா நாயர் அவர்கள் கேப்டனுடன் அன்போடும், பாசத்தோடும் பழகியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.




