Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திரு.தர்மேந்திரா (89) வயது மூப்பின் காரணமாகச் மும்பையில் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனுக்கு பிடித்த ஒரு நடிகர் தர்மேந்திரா. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். 1992 ஆம் ஆண்டு வெளியான பரதன் திரைப்படம் இவர்களிடம் உரிமம் பெற்று எடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் முக்கியமான திரைப்படம் சோலே இந்த படத்தை வைத்துதான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். அவரது இழப்பு பாலிவுட் திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் மறைந்தாலும் காலம் இருக்கும் வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும். தன்னுடைய நடிப்பு ஆற்றலால் அனைவரையும் கவர்ந்ததோடு தன்னுடைய திறமையையும் நிரூபித்தவர். அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும் குடும்பத்தாருக்கும் மனைவி ஹேம மாலினி மற்றும் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல் அவர்களுக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’  தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarApr 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...