Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி அறிக்கை

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி அறிக்கை

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவிற்கு, மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக பல நாட்களாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் சுரேஷ்குமார் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் குறித்து புகார் அளித்த மக்களுக்கு இன்று நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பாக மனமார்ந்த நன்றிகளையும்   வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாநகராட்சி வரியை உயர்த்தி, அதன் மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதாகக் கூறி, அந்தப் பணத்தில் ஊழல் செய்யும் இத்தகைய ஊழல்வாதிகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இதன்மூலமே தமிழ்நாட்டில் லஞ்சமும் ஊழலும் இல்லாத, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இலட்சியத்தின் படி  நேர்மையான ஆட்சி அமைய முடியும். இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு, மீண்டும் இது போன்ற தவறுகள்  நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதி என்ற போர்வையில் ஒட்டுமொத்த நீதிமன்றங்களையும், ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் இத்தகைய தொடர் செயல்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுபோன்ற நாடகங்களை விடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீதி மன்றம் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், ஊழல் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்டு, மதுரை மாநகராட்சிக்கு மீண்டும் செலுத்தி,  மதுரை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...