Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் திரைப்படத்தில்  அம்மாவாக நடித்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். கலை உலகில் அரசியாக வாழ்ந்தவர். அவரது இழப்பு திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் மறைந்தாலும் காலம் இருக்கும் வரை அவரின் புகழ் நிலைத்திருக்கும். தன்னுடைய நடிப்பு ஆற்றலால் அனைவரையும் கவர்ந்ததோடு தன்னுடைய திறமையையும் நிரூபித்தவர். சரோஜா தேவி அவர்களின் மறைவு சினிமா உலகிற்கே பேரிழப்பு, அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும், குடும்பத்தாருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...