Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மருத்துவ கல்வி முறையில், மிக்ஸோபதி (MIXOPATHY) பாடத்திட்டத்தை கைவிட்டு, பாரம்பரிய வைத்திய முறைகளை நவீனப்படுத்த வேண்டி அறிக்கை 

மருத்துவ கல்வி முறையில், மிக்ஸோபதி (MIXOPATHY) பாடத்திட்டத்தை கைவிட்டு, பாரம்பரிய வைத்திய முறைகளை நவீனப்படுத்த வேண்டி அறிக்கை 

புதுச்சேரியில் செயல்படும் உலகப்புகழ் வாய்ந்த மருத்துவக் கல்வி நிறுவனமான ஜிப்மர் (Jipmer) நிறுவனத்தில் மத்திய அரசு MBBS- BAMS பாடத்திட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து, புதியதோர் கல்வி முறையை செயல்படுத்தும் திட்டம் ஆலோசனையில் இருப்பதாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு.பிரதாப் ராவ் ஜாதவ் அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எந்தவித அடிப்படை புரிதலின்றி, அறிவியல் தத்துவங்களுக்கு எதிரானதொரு நிலை கொண்ட, இந்த MIXOPATHY மருத்துவ முறையை அமல்படுத்தும் எண்ணத்தை கைவிட வேண்டும். MBBS எனப்படும் Allopathy மருத்துவ முறை, நவீன அறிவியல் தரவுகளுடன், பலதரப்பட்ட நிலை சோதனைகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறை. BAMS எனப்படும் ஆயுர்வேத மருத்துவ முறை, பாரம்பரியமாக, அனுபவம் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் இருப்பினும், நவீன அறிவியல் தரவுகள் முறைப்படி இல்லை. இவ்விரு மருத்துவ முறைகளும் அவற்றை செயல்படுத்துவதில், வெவ்வேறு விதமான வழிமுறைகளை கொண்டுள்ளன. எனவே இந்த MIXOPATHY மருத்துவ முறை செயல்படுத்தப்பட்டால் சிகிச்சை முறைகளை தெரிவு செய்வதில், நோயாளிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மேலும், கற்கும் மாணவர்களுக்கும் எள்ளளவும் உதவிடப் போவதில்லை. சீனாவிலும் MIXOPATHY பாடத்திட்ட சோதனைகள் நடைபெற்று வந்தாலும், அத்திட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை கண்டறிய முடியவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, மேற்கண்ட அறவே சாத்தியமில்லாத கல்வி முறையினை செயல்படுத்தும் சிந்தனையை தவிர்த்து, சித்தா, ஆயுர்வேதம் போன்ற நம் பாரம்பரிய மருத்துவ முறைகளை முழுமையாக ஆராய்ந்து, நவீன மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தி பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொண்டு, ஆராய்ச்சி முறைகளை மேம்படுத்தி நம் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், உலகத்தர சிகிச்சைகள் வழங்கிட இயலும் என்னும் நிலையை எட்டும் வண்ணம், பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீனப்படுத்தும் வேலைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசை தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...