Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் – பக்ரீத் வாழ்த்து செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் – பக்ரீத் வாழ்த்து செய்தி

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு என் இதயபூர்வமான பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈதுல்-அழ்ஹா எனப்படும் பெருநாளாகும். தியாகத்தையும், ஈகையை சின்னமாகக் கொண்ட இந்த நாளில், மனித நேயம், சமரசம், சகோதரத்துவம் ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. இத்தகைய உயரிய வாழ்வு முறை அடிப்படைகளை நினைவூட்டும் இந்த நாளில், அனைவரும் அமைதியாக, மகிழ்ச்சியாகவும், பாசத்துடனும் திருநாளை கொண்டாட இறைவன் அருள் புரிவானாக. இந்நாளில் ஏழை, எளியோர்களுடன் நம் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம். நமது சமுதாயத்தில் மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் அன்பு நிரம்பிப் பெருக வாழ்த்துகிறேன்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...