Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

பீளமேடு பகுதி விளாங்குறிச்சி சாலையில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைய உள்ளதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அறிக்கை

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி 26வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் புதிதாக அமைய உள்ள குப்பை கிடங்கு தரம் பிரிப்பு மையத்திலிருந்து சுமார் 30 மீட்டர் அளவில் ஏற்கனவே குப்பை தரம் பிரிப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு, மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த பகுதியில் ஏறத்தாழ சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தில் கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் ஒரு கிடங்கு அமைக்கின்ற பணிகள் கோவை மாநகராட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பீளமேடு குடியிருப்பு சங்கங்கள் மூலமாக கோரிக்கை மனுக்கள் பல்வேறு அதிகாரிகளுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. பீளமேடு பகுதியில் புதிதாக மேற்கண்ட குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கப்பட்டால் ஏறத்தாழ 50 ஆயிரம் மக்களின் சுகாதாரம் என்பது, தற்பொழுதும், காலப்போக்கிலும் தொடர்ந்து சீர்கெடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தற்போதைய தலைமுறையும், எதிர்காலத் தலைமுறையும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படாமல் இருக்க, மக்களுக்கு இடையூறு இல்லாதவாறு அமைக்க வேண்டும். பீளமேடு பகுதியில் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, புதியதாக அமைய உள்ள குப்பை தரம் பிரிக்கும் கிடங்கினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...