Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி அறிக்கை – 28.03.2025

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி அறிக்கை – 28.03.2025

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பாரத  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பாலம். எனவே இந்த பாம்பன் பாலத்திற்கு ராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்து, வளர்ந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை புதிய பாம்பன் பாலத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். பிரதமர் அவர்கள் ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறக்க வரும் நிலையில் அந்த பாலத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல்கலாம் அவர்கள் பெயரைச் சூட்டி இஸ்லாமியர்களுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பாரம்பரியம் மிக்க நமது பாம்பன் பாலத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ரம்ஜான் விரதம் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...