Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்ததை கண்டித்து அறிக்கை

கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்ததை கண்டித்து அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது. இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜெகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். இந்த விசாரணையில் ஜெகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை திருமயம் போலீசார் கைது செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ் 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேர் கைது, மேலும் குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து திமுக ஆட்சியில் இது போன்ற கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது சமூக ஆர்வலராக ஒருவர் கனிமவள கொள்ளை நடப்பதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யாததால் அவர் திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்த உண்மை நிலை விசாரணையில் வெளியே வந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும். இனி இதுபோன்ற கொலைகள் எங்கும் நடக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அடக்க வேண்டும். உண்மைக்காக குரல் கொடுத்த ஒருவரை கொலை செய்தது எந்த விதத்தில் நியாயம்?. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்ற மக்களின் கேள்விக்கு இந்த அரசு பதில் தர வேண்டும். கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...