Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அறிக்கை

பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், ஃபெங்கல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா, கள்ளச்சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு (06.01.2025) அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஜனநாயக முறைப்படி வன்முறைக்கு இடம் கொடுக்காமல், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல், ராணுவக் கட்டுப்பாட்டுடன் நம் தலைவர் கேப்டன் அவர்கள் நம்மை வழி நடத்திய வகையிலே மிகவும் கண்ணியத்தோடு, தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய, அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணியினருக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மக்களுக்காக நாம் போராடும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டமும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. இன்றைய ஆர்ப்பாட்டத்தை மகத்தான வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றிய அனைவருக்கும் தேமுதிக சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி – கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி – 24.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A., MLA., அவர்கள் இன்று (24.07.2026) கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்…

ByBySenthil KumarJul 24, 2026

விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி, பயனியர் நிழற்குடை திறப்பு விழா -பத்திரிக்கை செய்தி – 23.07.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2006 முதல் 2011 வரை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது விருத்தாசலம்…

ByBySenthil KumarJul 24, 2026

தொடரும் லாக்கப் படுகொலைகள் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து…

ByBySenthil KumarJul 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை…

ByBySenthil KumarJul 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...