Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கிண்டி அரசு மருத்துவவமனையில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து அறிக்கை

கிண்டி அரசு மருத்துவவமனையில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து அறிக்கை

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கியது கண்டனத்துக்குறியது. மேலும் மருத்துவரை தாக்கிய அந்த இளைஞருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை தரவேண்டும். சட்டம், ஒழுங்கு இன்றைக்கு சீர்குலைந்து, கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு நடப்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடவுளுக்கு அடுத்ததாக உயிரை காப்பாற்றும் பணியை செய்பவர்கள் தான் மருத்துவர்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு சிகிச்சை அளித்தும், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத விரக்தியில் அந்த இளைஞன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. அதன் உண்மை நிலை அறிந்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமையாகும். அதேபோல் மனநிலையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் எதற்காக கொடூர செயலில் கத்தியால் தாக்கினான் என்ற உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

Releated Posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம்மில் பிறந்து நம்முடைய உறவினர்களாக வாழும் அவர்களுக்கு இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை உணர்ந்து,…

ByBySenthil KumarDec 3, 2024

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது

திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக    சிக்கி தவித்த 7 பேரும்…

ByBySenthil KumarDec 3, 2024

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கித் தவிப்பு – மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டி அறிக்கை

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும்…

ByBySenthil KumarDec 2, 2024

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனடியாக நிவாரணமும், பயிர் இழப்பீடும் வழங்க ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி அறிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அல்லது…

ByBySenthil KumarDec 2, 2024
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...