Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்பு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை வேண்டி அறிக்கை

மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்பு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை வேண்டி அறிக்கை

மதுரையில் வரலாறு காணாத கனமழை பெய்ததினால் மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து இருக்கின்றது. தண்ணீர் உடனடியாக வடிவதற்கு வைகை ஆறு மற்றும் குளங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும் மதுரையில் இந்த அளவு தண்ணீர் தேங்க வேண்டியதன் காரணம் என்ன? கண்மாய், ஓடைகள் முறையாகத் தூர்வாராமல் இருந்ததினாலே ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாகிய பீபிகுளம், செல்லூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பெரும் மழையாக இருந்தாலும் ஓரிரு நாள் மழைக்கே ஏன் இந்த அளவு பாதிப்பு என்பதனை ஆராய்ந்து மதுரை மாநகராட்சி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக மாநகராட்சியும், அதிகாரிகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து மாத்திரைகள், தங்குவதற்கான இடம் கொடுத்து அவர்களைப் பாதுகாத்துத் தேங்கி இருக்கின்ற தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் தடுத்துப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உதவிகளைச் செய்து இந்த மழைக் காலத்தில் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. ஓரிரு நாள் மழைக்கே ஏன் இந்த அளவு பாதிப்பு என்பதனை மதுரை மாநகராட்சியும், தமிழக அரசும் விளக்கம் தரவேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...