Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்

25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 12ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெள்ளி விழா 25 ஆம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி கடந்த 2000ஆம் ஆண்டு நமக்காக மூவர்ண கொடியை நமது தலைவர் கேப்டன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கிய பின், அதை கழக கொடியாக மாற்றி அந்த கொடிநாளை தமிழக முழுவதும் ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மூவர்ண கொடியின் வர்ணங்கள் மூலம் நமது கழகத்தின் கொள்கைகளை, சனாதனம், சமதர்மம், சமுகநீதி, சமசிந்தனையை பறைசாற்றுகின்ற ஒரு கொடியாகவே நமக்கு நமது தலைவர் அளித்தார். ஜாதி, மத, மொழி வேறுபடு இல்லாமல், அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, தரமான மருத்துவம், வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் இல்லாத நிலை, வளமான தமிழகத்தை நமது புரட்சி தீபம் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை தந்து, அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயம், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் இல்லாதா நேர்மையான வெளிப்படையான ஆட்சி போன்ற எண்ணற்ற புரட்சிகராமான கொள்கைகளையும் கொடி அறிமுகப்படுத்திய அன்றே நமக்கு உறுதிசெய்திருக்கிறார். அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை கழக பகுதிகளில் பழைய கொடிகளை அகற்றிப், புதுக்கொடிகளை ஏற்றி, கழக கொடிகள் இல்லாத இடத்தில் புதுக் கொடிகளை அமைத்து வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தேமுதிக கொடியை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஏற்றிட வேண்டும்.

தலைவர் கேப்டன் அவர்களின் கோட்பாடு படி இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மற்றும் முதியவர்களுக்கு உதவிகளை செய்யவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை அசுர வேகத்தில் நடத்தி, அதிகமான உறுப்பினர்களை நமது கொடி நாளில் முகாம்கள் அமைத்து பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து, அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக நமது கழகத்தை வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும் நாம் அனைவரும் இந்த நாளிலே சூளுரை ஏற்று, நமது கழகக் கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட நாம் அனைவருமே உறுதிமொழி ஏற்போம் என தேமுதிக வெள்ளி விழா ஆண்டு கொடிநாளில் கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லாடா!!

இயன்றதை செய்வோம்! இல்லாதவர்க்கே!!

நன்றி!    வணக்கம்…

Releated Posts

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் – 1 தமிழக விவசாயிகளின் துயரத்தையும் கடன் சுமையையும் கருத்தில் கொண்டு, தகுதியான அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின்…

ByBySenthil KumarSep 16, 2026

தேமுதிக – பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிக்கை செய்தி – 15.09.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்கள் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (15.09.2026) பேரறிஞர் அண்ணாவின்…

ByBySenthil KumarSep 15, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...