தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கழக அவைத் தலைவர் டாக்டர் திரு.வி.இளங்கோவன், அவர்கள், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ்,B.A.,MP., அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம் திரு.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர்கள் திரு.எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் அவர்கள், திரு.எஸ்.செந்தில்குமார்,Ex:MLA., அவர்கள், திருமதி.ஆர்.சுபா ரவி,Ex:MLA., அவர்கள், மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், முக்கிய ஆலோனைகள் நடைபெற்றது.








