இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற சொல்லுக்கு இலக்கணமாக நம்மிடமிருந்து மறைந்தாலும் தெய்வமாக நம் அனைவரையும் வழி நடத்திக் கொண்டிருக்கும் நமது அன்பு தலைவர் பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களது 74வது பிறந்தநாளில் (25.08.2026) தமிழகம் முழுவதும் “இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே” என்ற கொள்கைப்படி அன்னதானம் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் தந்து, கழக கொடியேற்றி, பேனர்கள் அமைத்து வறுமை ஒழிப்பு தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய அனைத்து மாவட்டம், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கேப்டன் ஆலயத்தின் (தலைமை கழகம்) சார்பில் எங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்கள், முன்னாள் முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னாள் முதல்வர் அண்ணன் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திருமதி.கனிமொழி கருணாநிதி,MP., அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், விசிக தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.மாணிக்கம் தாகூர் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர், வீ த லீடர் அமைப்பின் தலைவர் திரு.அண்ணாமலை, திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன், மக்கள் நீதி மய்யம் நிறுவனர் திரு.கமல்ஹாசன்,MP., அவர்கள், முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள், அஇபுதமமுக தலைவர் திருமதி.சசிகலா அம்மையார், சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.கே.ஜி.அருண் ராஜ் அவர்கள் மற்றும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த நடிகர் திரு.மன்சூர் அலிகான், திரு.எம்.எஸ்.பாஸ்கர், திரு.கிங்காங், திரு.கூல் சுரேஷ், ரோபோ சங்கர் குடும்பதினர், ஸ்டார் சினிமாஸ் தயாரிப்பாளர் திரு.முகேஷ் டி.செல்லையா அவர்கள், இயக்குனர் திரு.மித்ரன் ஆர்.ஜவஹர் அவர்கள், கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பு மற்றும் நடிகர் சங்கத்தினர், திரைப்பட இயக்குனர்கள், சின்னதிரை நடிகர், நடிகைகள் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.




