தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (17.01.2026) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக துணைச் செயலாளர் திரு.SSS.U.சந்திரன் அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜய் பிரபாகர் அவர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.










