Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்)(12.03.2026) வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அது சமயம் கூட்டணிக்கட்சி தலைவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர், சிறுபான்மை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் திரு.SM.இதயத்துல்லா அவர்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயாளர் திரு.KAM.முஹம்மது அபூபக்கர் அவர்கள், விடுதலை சிறுத்தைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆளூர் ஷா நவாஸ்,MLA., அவர்கள், மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு.M.H.ஜவஹருல்லா,MLA., அவர்கள், மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் கலைக்குயில் திரு.இப்ராஹிம் அவர்கள், SDPI தலைவர் நெல்லை திரு.முபாரக் அவர்கள் நிகழ்ச்சியில் கந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

எனவே இந்நிகழ்ச்சிக்கு தாங்கள், தங்கள் பத்திரிகை மற்றும் ஊடகத்திலிருந்து நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களை அனுப்பி வைத்து செய்திகளை சேகரித்து தங்கள் பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளியிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல்…

ByBySenthil KumarSep 7, 2026

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...