விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் (01.08.2026) சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு, இந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் ஆகஸ்ட் 2 முதல் 4ஆம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளதால், இந்த ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.




