Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தீபாவளி வாழ்த்துச் செய்தி – 30.10.2024

தீபாவளி வாழ்த்துச் செய்தி – 30.10.2024

      தீபாவளி திருநாள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை ஏற்றும் தீபஒளி திருநாளாக இதைப் போற்றுகிறார்கள். இந்த இனிய நாளில் தங்களின் துன்பங்கள் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ, வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில், இறைவனைப் போற்றி, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி, வாழ்த்துக்களைக் கூறி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

      கேப்டன் அவர்கள் மனிதராய் பிறந்து, புனிதராய் வாழ்ந்து தெய்வமாக இன்றைக்கு நம் அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறார். கேப்டன் அவர்கள் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தீபாவளி, நம் தலைவர் நம்மிடையே இல்லை என்ற சோகம் நமக்கு மிகப்பெரிய அளவில் இருந்தாலும், கேப்டன் நமது கொடியின் நடுவில் இருக்கும் தீப ஒளியாய் நம் அனைவரின் உள்ளத்திலும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தமிழக மக்கள் அனைவராலும், பெண்களாலும், இளைஞர்களாலும், தொண்டர்களாலும் வரவேற்க கூடிய, விரும்பக் கூடிய மகத்தான வெற்றிக் கூட்டணியை நமது கேப்டன் அவர்கள் தெய்வமாக நம்முடன் இருந்து ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டும் என்று இந்த தீபாவளி நாளில் நாம் அனைவரும் கேப்டனை நினைத்து வழிபடுவோம். நமக்கான ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் நம்மோடு இருந்து வழிநடத்தி, அவருடைய கனவு, லட்சியத்தை வென்றிட ஒன்று சேர்ந்து இந்த தீபாவளி நாளில் நாம் அனைவரும் கேப்டனை நினைத்து வணங்குவோம். தமிழக மக்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம்…

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...