Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை இரயில் விபத்து குறித்து அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை இரயில் விபத்து குறித்து அறிக்கை

திருவள்ளூர்  மாவட்டம்  கவரப்பேட்டையில் நேற்று (11.10.2024) இரவு ரயில் விபத்து ஏற்பட்டது துரதிஷ்டமானது. ரயில் விபத்துக்கான காரணம் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். மெயின் லையனில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் லூப் லையனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது மிகப் பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குத் தொழில்நுட்ப பிரச்சனை காரணம் என்று சொல்கின்றனர். மக்கள் உயிரைத் துச்சமாக நினைத்து கவனக்குறைவாகச் செயல்படும் அரசுகள் உடனடியாக விபத்துக்கள் நடக்காத வண்ணம் கவனம் செலுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் இல்லை என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காத வண்ணம் கவனமாகச் செயல்பட வேண்டியது அரசுகளின் கடமை ஆகும். எனவே காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...