Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழக அரசுப் பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை

தமிழக அரசுப் பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை

தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகள் சங்கத்தின் துவக்க விழாவில், தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார்ப் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானத்திற்கு வரவேற்றுப் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் கருத்துக்கு தேமுதிக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய கல்விக் கொள்கையில் ஒன்றான அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில கல்வி உரிமைகளைப் பாதுகாத்திடும் அரசாக இந்த அரசு இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார்ப் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார்ப் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப்பள்ளிகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்களுக்குத் தாரைவார்க்க நினைப்பது, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிகளைத் தனியார் மயமாக்கப்படும் என்பது வீணான வதந்தி என்று அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் சப்பை கட்டுக் காட்டினாலும் இதன் உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். இல்லை என்றால் இந்த வதந்தி உண்மையாகக் கூடும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருக்கிறது எனவே இதற்கான முழு விளக்கத்தையும் அமைச்சர் தர வேண்டும். எனவே தமிழக அரசு தனியார்ப் பள்ளிகளின் தரத்திற்குச் சமமாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...