Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஒரே நாளில் யார் அனுமதி கொடுத்தது, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததையும் கண்டித்து அறிக்கை

தமிழகம் முழுவதும் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் நிலையில், திமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஒரே நாளில் யார் அனுமதி கொடுத்தது, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததையும் கண்டித்து அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி எதிர்க்கட்சிகள் போராடுகின்ற போது அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யபடுகின்ற ஒரு நிலை தமிழகம் முழுவதும் இருக்கின்ற நியலையில், திமுகவுக்கு மட்டும் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த யார் அனுமதி கொடுத்த?. இன்றைக்கு எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நசுக்குகின்ற வகையில், ஜனநாயகத்திற்கு எதிராக, இந்த ஆட்சிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க கூடாது, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, அமைதி பேரணி நடத்தக்கூடாது, ஆனால் திமுகவுக்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரே நாளில் அனுமதி யார் வழங்கினர். உங்கள் மீது யார் வழக்கு பதிவு செய்வது? இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். மேலும், மதுரை மேலூரில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடுகின்ற மக்களுக்கு இந்த அரசு அனுமதி மறுக்கின்றது. ஊராட்சிகளை பேரூராட்சியுடனும், நகராட்சியுடனும், மாநகராட்சியுடனும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை முன்வைக்கும் பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டு, ஆனால் திமுக நடத்துகின்ற ஆர்ப்பாட்டதிற்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கின்றனர், இது எந்த வகையில் நியாயம். திமுகவுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? என்ற கேள்விக்கு திமுக அரசும், முதலமைச்சர் அவர்களும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக திமுகவின் ஆட்சி இருக்கிறது. இதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...