Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தில் 93 லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டதற்கான அறிக்கை

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தில் 93 லட்சத்து 37 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டதற்கான அறிக்கை

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) நடவடிக்கையின் மூலம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்ற தகவல் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் மற்றும் சில வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நீக்கங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, உண்மையின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது பொதுமக்களின் முக்கியமான பொறுப்பாகும். ஜனநாயக நாட்டில் ஓட்டுரிமை என்பது அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமை ஆகும். உண்மையான காரணங்கள் இல்லாமல், தவறுதலாகவோ அல்லது அரசியல் காரணங்களாலோ வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், அதனை எதிர்த்து கேள்வி கேட்கவும், திருத்தம் கோரவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு உரிமை உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளனவா, அல்லது நீக்கப்பட்டிருந்தால் அது சட்டப்பூர்வமான காரணங்களின் அடிப்படையில் தானா என்பதை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் அமைத்துள்ள முகாம்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை செயல்பட இருக்கிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் நேரில் சென்று, தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள தேவையான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் குடும்பத்தினரும் தங்களின் வாக்குரிமையை பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்வதும், தவறுகளை திருத்திக் கொள்வதும் நமது ஓட்டுரிமை நமது ஜனநாயக கடமை.

Releated Posts

செவிலியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

சென்னையில், பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப் பேசி,…

ByBySenthil KumarDec 20, 2025

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...