Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2026 முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வருத்தத்தையும் அதே நேரத்தில் நியாயமான போராட்டம் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை முறையான ஊதிய மாற்றம் வழங்கப்படாததும், பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தொடர்ந்து தற்காலிக நிலைமையில் வைத்திருப்பதும் கடும் அநீதி ஆகும். அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பு இவர்களிடமே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவுகள் ஆகியவை ஊராட்சி செயலாளர்களின் மன உறுதியை உடைக்கும் செயல். 2018-ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஊதிய விகித மாற்றத்தை வழங்கவும். அனைவருக்கும் பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதிய பலன்களை உறுதி செய்யவும். போராட்ட காலத்தில் விதிக்கப்பட்ட அனைத்து ஒழுக்க நடவடிக்கைகளையும், சஸ்பெண்ட் உத்தரவுகளையும் உடனடியாக ரத்து செய்து, ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். ஊராட்சி செயலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவு அளிப்பதுடன், அவர்கள் உரிமைகள் பெறப்படும் வரை தொடர்ந்து துணை நிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...