Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அறிக்கை

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அறிக்கை

சபரிமலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்லும் பக்தர்களுக்கு கனிம வள லாரிகள் விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கார்த்திகை மாதம் தொடங்கி இரண்டு, மூன்று நாட்களில் வாகன விபத்துகள் அதிக இடத்தில் நடந்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு கனிம வள லாரிகள் செல்வதை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். சபரிமலையில் கூட்ட நெரிசலில் இன்றைக்கு ஒரு பெண் பலியாகியுள்ளார். குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்படுகிறார்கள். இதையெல்லாம் தேவஸ்தானம் முறைப்படுத்தி பக்தர்கள் வந்து செல்ல பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.  சபரிமலைக்கு சென்று வருபவர்களுக்கு போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமலும், விபத்துகள் ஏற்படாமலும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தமிழக அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.   

Releated Posts

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 23.10.2026

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 23, 2026

விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்து – 40 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன…

ByBySenthil KumarOct 23, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 22.10.2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (22.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்…

ByBySenthil KumarOct 22, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (21.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 21, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...