Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் சிரமத்திற்கு உள்ளாகியதைக் கண்டித்து அறிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் சிரமத்திற்கு உள்ளாகியதைக் கண்டித்து அறிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என சிகிச்சைக்கு வரும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி (வீல்சேர்) வழங்காமல் 3 மணி நேரம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கி பணம் கொடுத்தால்தான் சக்கர நாற்காலி கொடுக்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? அரசு மருத்துவமனை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதால் இதற்குத் தீர்வாகுமா? மனிதநேயத்தோடு செயல்படாத அந்த அரசு மருத்துவமனையின்  ஊழியர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தேமுதிக சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.  

Releated Posts

கருப்பு கொடியேற்றி, கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தேமுதிக தலைமை அலுவலகத்திலும் (கேப்டன் ஆலயம்), கேப்டன் வீட்டிலும், தேமுதிகவினர் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். புரட்சி…

ByBySenthil KumarApr 16, 2026

தேமுதிக தேர்தல் பிரச்சாரப் பாடல் 2026 | முரசு கொட்டட்டும் ஸ்டாலின் தொடரட்டும் | DMDK Campaign Song

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் ‘முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்!’  தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarApr 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...