உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வ ரத்த தானம் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி வரும் அனைத்து ரத்த தானதாரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் அவர்கள் ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலேயே ரத்ததானம் வழங்குவதை ஊக்குவித்து வந்தார். விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவ கால அவசர நிலைகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உயிரைக் காக்க ரத்த தானம் இன்றியமையாத ஒன்றாகும். ஒருவரின் தன்னலமற்ற செயல், மற்றொருவரின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் உயிரையும் அளிக்கிறது. இளைஞர்கள் தன்னார்வத்துடன் தொடர்ந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உலக ரத்த தான தினமான இன்று, பாதுகாப்பான மற்றும் போதுமான ரத்த இருப்பை உறுதி செய்வதற்காக அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மனிதநேயத்தைப் பேணுவோம் என உறுதியேற்போம். என்றும் கேப்டன் வழியில் “இரத்த தானம் செய்வோம்; உயிர்களை காப்போம்“.




