Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • இனிய புத்தாண்டு வாழ்த்து செய்தி

இனிய புத்தாண்டு வாழ்த்து செய்தி

இன்பம் பெருகும், துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நன்நாளிலிருந்தாவது தங்களின் வாழ்க்கை மேன்மையடையும் என்ற உறுதியான நம்பிக்கையோடு புத்தாண்டை எதிர் நோக்குகின்றனர். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கையின் அடிப்படையில், தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவ வேண்டும். வரும் 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டுமென தேமுதிக சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி ஆண்டாக அமைய வேண்டும். மக்கள் மற்றும் தொண்டர்களின் பேராதரவுடன் தேமுதிக சார்பில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0”, கேப்டனின் கனவு லட்சியத்தை வென்றெடுக்கும் மாநாடாக அமையும். இந்த மாநாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து முக்கிய திருப்புமுனையை  உண்டாக்கும் மாநாடாக இருக்கும். அனைவருக்கும் இந்த புத்தாண்டு ஒளிமையமான, வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமைய எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Releated Posts

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026

காட்டு யானை தாக்குதலில் 14 வயது சிறுவன் பலிபொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை – 03.06.2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் முடிதிருத்தம் செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவன் மிஸ்ஹாப்…

ByBySenthil KumarJun 3, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...